சென்னை – சேலம் இடையிலான விமான சேவை பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி கொரோனா முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனால் விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் சென்னை – சேலம் இடையிலான விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பத்து நாட்களுக்குப் பிறகு சென்னை – சேலம் இடையே இன்று மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 8.15 மணிக்கு சேலம் விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதில் 10-க்கும் குறைவான பயணிகளே வந்தனர். கொரோனா அச்சம் காரணமாக விமானத்தை பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.







