சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் முருகேசன் சிவக்குமார் இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் ’தாய் கிழவி’ படக்குழுவை நடிகை ஜோதிகா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! மனதைத் தொடும், மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் மிக முக்கியமாக இவ்வளவு முற்போக்கான படம்!
இயக்குநர் முருகேசன் சிவக்குமார், இது உண்மையில் உங்கள் முதல் படமா? கண்ணியம் மற்ரும் நகைச்சுவையுடன் நமது சமூகத்திற்கு நீங்கள் எவ்வளவு முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்! உங்கள் கதையைப் பார்த்து ஒரு பெண்ணாக மிகவும் பெருமைப்படுகிறேன்.
ராதிகா போன்ற ஒரு சக்திவாய்ந்த திறமையாளருக்கு அவர் உண்மையிலேயே தகுதியான மேடையை வழங்கிய சிவகார்த்தியேனுக்கு நன்றி, வயது தடையை மீறி ஒரு பெண்ணையும் அவரது தூய திறமையையும் பற்றிய படத்தை உருவாக்கியதற்கு முழு நடிகைகள் சார்பாக நன்றி. பெண்களுக்கு இவ்வளவு முக்கியமான ஒரு படத்தை உங்கள் நட்சத்திர சக்தியுடன் ஆதரித்ததற்கும் நன்றி.
ராதிகா சரத்குமார் அவரக்ளே நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்! மிகவும் உத்வேகம் தருகிறீர்கள்! இந்த வேடத்தில் உடல் ரீதியாக எவ்வளவு கடின உழைப்பு செலுத்தப்பட்டது என்பதை கற்பனை கூட பார்க்க முடியாது. தாய் கிழவி சக்தி வாய்ந்தவள், புத்திசாலி மட்டுமல்ல, மிகவும் அழகானவள், அவள் திரைக்கு வெளியே ராதிகாவின் பிரதிபலிப்பு. நாம் அனைவரும் அறிந்ததே. உங்கள் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு, வசனம் மற்றும் உங்கள் சிறிய சைகைகள் மூலம் எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டீர்கள், இது ஒரு நடிகராக உங்களை வேறுபடுத்துகிறது!
தாய் கிழவி படமானது பெண்களால் இயக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம். தாய் கிழவி படக்குழுவினரே பெருமைப்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.







