கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர் – பொதுமக்கள் பாராட்டு!

வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, 15 அடி ஆழம் உள்ள கிணற்றில்  தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை…

வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, 15 அடி ஆழம் உள்ள கிணற்றில்  தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்.
இவருக்கு சொந்தமான பசு மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். காலை முதல் பசுமாடு அதே பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டு வந்தது. மாலையில் வீடு திரும்புவதற்காக பசுமாட்டை ஓட்டிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 15 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது.

அப்பொழுது மாட்டைக் காப்பாற்ற கோரி அருகில் உள்ளவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முயற்சித்தும் பயனில்லை. பின்னா் உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிற்றால் பிணைத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் அப்பகுதி விவசாயிகள் உதவியுடன் பசு மாட்டினை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.நீண்ட நேரம் போராடி பசு மாட்டினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.