தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி – படிக்கட்டில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று…

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 12) காலை தனியார் பேருந்தும்,  கன்டெய்னர் லாரியும் உரசி விபத்துக்குள்ளாகின.  இந்த விபத்தில் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த மோனிஷ்,  கமலேஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 5 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.  இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.