ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்

ஆளுநருக்கு எதிராகச் சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு என்ற புகழ்பெற்ற பெயரைப் பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.…

ஆளுநருக்கு எதிராகச் சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு என்ற புகழ்பெற்ற பெயரைப் பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது. அரசியல் அமைப்பின் படி இந்த பெயர் சூட்டுவதற்காகப் பலர் உயிரை இழந்திருக்கிறார்கள் என்றார்.

மேலும், ஆளுநர் நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு தமிழ்நாட்டிற்குள் மிகப்பெரும் போராட்ட களத்தை உருவாக்க முயல்கிறார். இது ஏற்கத்தக்கதல்ல, விவசாயிகள் ஒற்றுமையோடு இருக்கின்றோம், தமிழ்நாடு என்ற உரிமையோடு செயல்பட்டு வருகின்றோம். எங்களை அவமதிக்கும் வகையில் செயல்படும் ஆளுநருக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கூறினார்.

அத்துடன், தமிழக முதலமைச்சர் இதில் மௌனமாக இருக்காமல், நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் அரசியல் சட்டத்தை மீறி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் செயல்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு என்று பெயருக்குக் களங்கும்
ஏற்படுத்திய ஆளுநருக்கு ஒரு மிகப்பெரும் கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற
வேண்டும். ஆளுநரை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கரும்பு கொள்முதல் 6 அடிக்கும் குறைவான கரும்புகளையும் அரசு கொள்முதல்
செய்யவும். குறைந்தபட்சம் கரும்புக்கு 20 ரூபாய் விலை வழங்கவும் கேட்டுக்கொண்டார்.
25 மாவட்டங்கள் மற்றும் 12 மாநகராட்சிகளின் குடிநீர் ஆதாரமாகவும், 13 லட்சம்
ஏக்கரின் பாசனத்திற்காகவும் பயன்படும் காவிரியில், சாய,சலவை ஆலை கழிவுகள்
கலப்பதை அரசு போர்க்கால அடிப்படையில் தடுக்கவும், நீதிபதி தலைமையில் குழு
அமைக்கவும் வலியுறுத்தினார்.

அத்துடன், பரந்தூர் விமான நிலையம் குறித்து சட்டத்திற்குப் புறம்பாக எ.வா வேலு பேசுகிறார். வளர்ச்சி என்பது தமிழகத்தில் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி அமைய வேண்டுமே தவிர, அவர் ஆந்திராவை நோக்கி வளர்ச்சியை என்பது உள்ளாக்கப்பட்டது உண்மைக்குப் புறம்பானது. சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி தவிர்த்து மற்ற
அனைத்து விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது யாருக்காக நாட்டுக்காகவா மக்களுக்காகவா சுயநலத்திற்காகவா என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். முதல்வருக்கு உடன்பாடு இல்லாத பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தத் தீவிரமாகக் களம் இறங்க இருப்பது தெரியவில்லை என்றர்.

அத்துடன், நிதி அமைச்சர் இங்கே ஒன்று பேசுகிறார். அங்கே டெல்லி சென்று விமான துறை அமைச்சர் விரைவில் அனுமதி கொடுப்பதாக உத்தரவாதம் அளிப்பதாகச் சொல்கிறார். மூன்று அமைச்சர்களும் ஒன்று கூடி பரந்தூர் விமான நிலையம் மச்ஜேந்திரநாதன் குழு அறிக்கை பெற்றுத்தான் அங்கே நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப் போகிறோம் போராடாதீர்கள் எனச் சொல்கிறார்கள் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.