ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் வரவேற்பை பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

https://twitter.com/sunpictures/status/1612063915885854721?t=IxoXQsVMbBAhtcsBc3xXbA&s=08

ஏற்கனவே வெளியான ஜெயிலர் டீசர்  ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது  ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மடக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெய்லராக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க சிறைக்குள் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.