தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் ஈடுபட தடைகோரும் வழக்கு; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தீவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளை பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்கக்கோரிய மனு மீது பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

தீவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளை பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்கக்கோரிய மனு மீது பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தீவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளை பொது வாழ்வில் ஈடுபட தடை விதிக்க கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உப்பாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் அஸ்வினி உப்பாத்யாய் தீவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தொடர்ந்து பொதுவாழ்வில் நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என வாதங்களை முன் வைத்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம்,  மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.