முக்கியச் செய்திகள் தமிழகம்

அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் துர்கா. இவர் பிரசவ வலி வந்ததை அடுத்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அந்த அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணிப் பெண் துர்கா பிரசவ வலியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறி,  நடந்து சென்றே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுதொடர்பாக கர்ப்பிணி பெண் துர்காவிற்கு அக்டோபர் 1ம் தேதி தான் குழந்தை பிறக்கும் என்று அவரது கருவில் பிரச்சனை இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த அரசு தலைமை மருத்துவர் சியாமளா தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் இன்று அவருக்கு தனியார் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கர்ப்பிணி பெண்ணின் தாயார் கற்பகம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது- அண்ணாமலை

G SaravanaKumar

சமூக நீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுக்க வேண்டாம்-அதிமுகவிற்கு டி.ஆர்.பாலு கண்டனம்

Web Editor