சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே 2 கி.மீ ஸ்கேட்டிங் செய்த தனது மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது…

மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே 2 கி.மீ ஸ்கேட்டிங் செய்த தனது மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் அஸ்வின். இவன் 7ம் வகுப்பு பயின்று வருகிறான். இந்நிலையில் இன்று இரண்டு கிலோமீட்டர் தூரம் கைகளால் சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்து சாதனை புரிந்தான்.

சவாலான ஸ்கேட்டிங்கை கவனித்துக் கொண்டு, மனதையும் ஒருநிலைப்படுத்தி சிலம்பம் சுற்றியபடி சிறுவன் சென்றான். அவனை உடனிருந்தோர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். சிறுவன் ஒருபுறம் அனைவரது கவனத்தையும் பெற, அவனது தாயும் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள் : அச்சமின்றி செய்திகளை வழங்குங்கள்! – செய்தியாளர்களுக்கு பிபிசி தலைமை இயக்குனர் அறிவுரை

தனது மகனை உற்சாகப்படுத்திய அஸ்வினின் தாய், இரண்டு கிலோ மீட்டர் தூரம், ஸ்கேட்டிங் வேகத்திற்கு ஈடாக வேகமாக கைதட்டியபடியே ஓடி வந்தார். தனது மகன் இலக்கை அடைந்தது அவனை ஆரத் தழுவி வாழ்த்தினார். சிறுவனின் சாதனையும், அவனது தாயின் பாசமும் காண்போரை நெகிழச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.