மவுத் ஆர்கன் வாசிக்கும் கரடி – இணையத்தில் வைரல்!

ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கரடிக்கு மவுத் ஆர்கன் வாசிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இந்த வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ  ‘panteleenko_svetlana’…

ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கரடிக்கு மவுத் ஆர்கன் வாசிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இந்த வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ  ‘panteleenko_svetlana’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  இதில் ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மவுத் ஆர்கன் வாசிக்கிறார்.  பின்னர் அவர் அருகில் உள்ள தனது கரடியிடம் மவுத் ஆர்கனை கொடுக்கிறார்.  அந்த கரடி அதனை திருப்பி பார்த்துக் கொண்டிருக்கிறது.  உடனே அவர் மவுத் ஆர்கனை கரடியின் வாயில் வைக்க உதவுகிறார்.  பின்னர் அந்த கரடி மவுத் ஆர்கனை வாசிக்கிறது.  இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ மார்ச் 5 ஆம் தேதி பகிரப்பட்ட நிலையில்,  இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவியது.  இந்த வீடியோ 5.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.  இந்த பதிவுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்களும் கிடைத்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.