Ph.D-க்கு தயாராகியுள்ள 95 வயது முதியவர்!

இங்கிலாந்தை சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்து அசத்தியுள்ளார். அதோடு அடுத்ததாக பிஎச்டி ஆய்வு படிப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.  இங்கிலாந்து நாட்டின் சர்ரேயில் உள்ள…

இங்கிலாந்தை சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்து அசத்தியுள்ளார். அதோடு அடுத்ததாக பிஎச்டி ஆய்வு படிப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இங்கிலாந்து நாட்டின் சர்ரேயில் உள்ள வெய்பிரிட்ஜைச் சேர்ந்தவர் 95 வயது முதிய மர்ஜோட். ஓய்வுபெற்ற மனநல மருத்துவரான இவர் கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு படித்து மருத்துவ உரிமம் பெற்றவர் ஆவார். 65 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் அண்மையில் முதியவர் மர்ஜோட்டின் மனைவி காலமாகியுள்ளார். இந்நிலையில், தனது மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்த மர்ஜோட் தனது 95-ஆவது வயதில் புதிய பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளார். இதன் வாயிலாக 1994-ஆம் ஆண்டு 93 வயது முதியவர் செய்த சாதனையை மர்ஜோட் முறியடித்துள்ளார்.

பட்டம் வாங்கிய பின் பேசிய முதியவர் மர்ஜோட், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த முயற்சியை அனைவரும் மேற்கொள்ளலாம். உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களை பெற்றமைக்கு நான் அதிஷ்டம் செய்திருப்பதாக உணர்கிறேன். வயது அதிகமாகிவிட்ட போதும் உங்களுக்கு நீங்களே சவால் விடும் அளவுக்கு எதாவது செய்து கொண்டிருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன் என்று முதியவர் மர்ஜோட் கூறினார்.

தொடர்ந்து பேசிய மர்ஜோட், அடுத்ததாக பிஎச்டி ஆய்வு படிப்பை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இந்த பிஎச்டி ஆய்வு படிப்பை முடிக்க 102 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.