நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!

ராஜஸ்தானில் நில தகராறால் 80 வயது முதியவரை கோடாரியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கர்னவாஸ் கிராமத்தை சேர்ந்த 62 வயதான தீராஜ் சிங் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே…

ராஜஸ்தானில் நில தகராறால் 80 வயது முதியவரை கோடாரியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் கர்னவாஸ் கிராமத்தை சேர்ந்த 62 வயதான தீராஜ் சிங் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த 80 வயதான முதியவரின் விவசாய நிலத்தை சட்டவிரோதமாக தீராஜ் ஆக்கிரமித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. முதியவர் வீட்டில் தனியாக இருந்தபோது, தீராஜ், மனைவி உமத் கன்வார் மற்றும் மகன் தன்வர் சிங் ஆகியோர் அவர் வீட்டுக்கு சென்று கோடாரி மற்றும் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் இரத்த காயங்களுடன் முதியவர் வீட்டில் கிடந்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை போலீசார் விரைந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டத்தாக தெரிவித்தனர். பிரதே பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஐ.பி.சி. 302, 452 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.