#MadhyaPradesh -ல் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டையர்கள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் என்ற மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த…

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் என்ற மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி வரை 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், அனைவருக்கும் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

இதில், எடை குறைவாக இருந்ததால், ஒரு பெண் குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. மற்ற குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்! தேர்தலில் அபார வெற்றி!

இது தொடர்பாக அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் நிலாய் ஜெயின் என்பவர் கூறுகையில் :

“அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது 30 ஆண்டுகால அனுபவதில் இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.