ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி வெடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடித்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள ஜெரோ மாவட்டத்தில்  குழந்தைகள் சிலர்…

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடித்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள ஜெரோ மாவட்டத்தில்  குழந்தைகள் சிலர் ஒன்று சேர்ந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர்.  அப்போது அங்கு கிடந்த பழைய கண்ணிவெடி ஒன்றை எடுத்து என்ன பொருள் என தெரியாமல் வைத்து விளையாடி உள்ளனர்.  அப்போது திடீரென அது வெடித்ததில், 5 முதல் 10 வயதுடைய 5 சிறுவர்கள் மற்றும் 4 சிறுமிகள் என 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த கண்ணிவெடிகள் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும், பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தலிபான் தகவல் மற்றும் கலாச்சார துறையின் இயக்குநர் ஹமிதுல்லா நிசார் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற வெடிக்காத கண்ணிவெடிகள் திடீரென வெடிப்பதால் பலர் உயிரிழப்பதாகவும்,  ஊனமுற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.