புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. தடுப்பூசி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் , புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 நபர்களுக்கும், காரைக்காலில் 25 நபர்களுக்கும், மாஹேவில் 8 நபர்களுக்கும் என மொத்தம் 88 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மாநிலத்தில் 811 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மாஹேவில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1839 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,23,565 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,26,215 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.