80 சதவீத ஊழியர்கள் ஹிந்துக்கள்-லக்னோ லூலூ மால் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரில் அபு தாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லூலூ நிறுவனம் மிகப் பெரிய வர்த்தக வளாகத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில்தான் இந்த மால் திறக்கப்பட்டது. இந்த மாலில் கடந்த சில…

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரில் அபு தாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லூலூ நிறுவனம் மிகப் பெரிய வர்த்தக வளாகத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில்தான் இந்த மால் திறக்கப்பட்டது.

இந்த மாலில் கடந்த சில தினங்களுக்கு முஸ்லிம் குழு ஒன்று நமாஸ் செய்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களுக்கு மட்டுமே லூலூ மால் வேலைவாய்ப்பு கொடுத்ததாக குற்றம்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் லூலூ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் நிறுவனம் வர்த்தக நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம். எங்கள் நிறுவனத்தில் சாதி-மத ரீதியிலான பாகுபாடு எங்கள் நிறுவனத்தில் காட்டப்படுவதில்லை. திறமை, தகுதி அடிப்படையில் மட்டுமே எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சில சுயநல சக்திகள் எங்கள் நிறுவனத்தை குறிவைத்து இதுபோன்ற செயலை செய்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் 80 சதவீத ஊழியர்கள் ஹிந்துக்கள்தான். எஞ்சியுள்ளவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சில சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லூலூ மாலில் ஹனுமன் சாலிசாவை பாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். லூலூ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.