குடியரசு துணைதலைவர் தேர்தல்; மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்

குடியரசு துணை தலைவர் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் ஆல்வா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று  வேட்புமனு தாக்கல் செய்தார்.  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன்…

குடியரசு துணை தலைவர் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் ஆல்வா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று  வேட்புமனு தாக்கல் செய்தார். 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

இதேபோல் குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்தமாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ந்தேதி கடைசி நாளாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் நேற்று பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத கட்சியின் தலைவர் சரத்பவார், மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.