முக்கியச் செய்திகள் விளையாட்டு

“அடுத்த சீசனில் லக்னோ அணி இன்னும் வலிமையாக வரும்”

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆஃப் சுற்று வரை முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், 14 லீக் ஆட்டங்களில் விளையாடி 9 ஆட்டங்களில் வெற்றியும், 5 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்து 18 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் லக்னோ அணி இருந்ததாலும், எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்ததாலும் அந்த அணி வெளியேறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, வெளியேறியதால் அந்த அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலிமையாகத் திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “எலிமினேட்டர் சுற்றில் விளையாடியது சிறப்பாக இருந்தது. எனினும், தோல்வி அடைந்தது துரதிருஷ்டவசமானதாகும். நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலிமையாக வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலில் விளையாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 120 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 79 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணியில் ரஜத் படிதார் 112 ரன்கள் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூர் சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

Halley Karthik

பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்

Ezhilarasan

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

எல்.ரேணுகாதேவி