செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி; போலீசார் விசாரணை

கேரள மாநிலம் திருச்சூர் அருகே செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூர் அருகே திருவில்வ மலை பகுதியை சேர்ந்த அசோக் குமார் – சௌமியா தம்பதியினரின்…

கேரள மாநிலம் திருச்சூர் அருகே செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சூர் அருகே திருவில்வ மலை பகுதியை சேர்ந்த அசோக் குமார் – சௌமியா தம்பதியினரின் 8 வயது மகள், அங்குள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வீட்டில் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து சிதறியுள்ளது.

இதில் பரிதாபமாக சிறுமி உயிரிழந்த நிலையில், பசயனூர் போலீசார் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.