7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் நடைபெற்று வரக்கூடிய தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்…

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் நடைபெற்று வரக்கூடிய தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழகம் முழுவதும் 5,73,901 பேருக்கு நேற்று இரவு வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவித்தார். மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவது மகிழ்வாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

7வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், 59,0000 லட்சம் தடுப்பூசிகள் தற்பொழுது கையிருப்பில் உள்ளதாகவும் மலை வாழ் மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுவதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்களை மக்கள் தாரளமாக பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழக மக்களுக்கு வேண்டுகோளாக முன் வைத்தார். நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து 1 கோடியே 40 லட்சம் தடுப்பூசி வர உள்ளதாக தகவல் தெரிவித்தார். மக்கள் ஒத்துழைப்பு செய்தால் நவம்பர் மாதத்திற்குள்ளாக 100 % சதவீத தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் தமிழகமும் இடம் பெறும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.