முக்கியச் செய்திகள் இந்தியா

ஜாமீனில் விடுதலையானார் ஆர்யன் கான்

போதை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த அக்.3ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நேற்று மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை.

இதனையடுத்து தற்போது அவர் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார். ஏறத்தாழ 27 நாட்களுக்கு பினரன் அவர் வெளிவந்துள்ளார்.

அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் கூடாது என்றும், வெளிநாடு செல்வதெனில் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஜாமீன் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

Ezhilarasan

இந்தியாவில் நேற்றைவிட கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Saravana Kumar

காணாமல் போன வேட்பாளர் மயங்கி நிலையில் மீட்பு!