“இந்திய கலாச்சாரத்தின் மதிப்பிட முடியாத பரிசு யோகா”: பிரதமர் மோடி

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகா நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 7-வது சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர்…

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகா நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7-வது சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவுக்காக “எம்.ஆப்” எனப்படும் செயலியை அறிமுகம் செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்காகவும், ஒவ்வொரு நாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக கூறிய மோடி, “இந்திய கலாச்சாரத்தின் மதிப்பிட முடியாத பரிசு யோகா” என்று குறிப்பிட்டார்.

கொரோனாவிலிருந்து மீண்டு வர, யோகா உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். மன அழுத்தத்தை குறைக்கவும் நேர்மறையாகவும் செயல்படவும், யோகா உதவுவதாகவும் தெரிவித்தார். நோய்க்கான மூலக் காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை விளக்க, “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி உரையாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.