மதுரையில் 301 பேருக்கு கருப்பு பூஞ்சை

மதுரையில் 301 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. மதுரையில் கடந்த சில தினங்களாகவே கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக மதுரை…

மதுரையில் 301 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மதுரையில் கடந்த சில தினங்களாகவே கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10நாட்களுக்கு முன்பு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு வார்டுக்கு தனியாக துறை தலைவர் மற்றும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் தற்போதுவரை 301 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 130 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 138 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் 33 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இதன்காரணமாக மதுரையில் மொத்தமாக 171 பேர் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் மருத்துவமனைகளில் கையிருப்பு உள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.