சினிமா

KGF 2ம் பாகத்தின் டீசர் வெளியானது!

KGF இரண்டாம்பாகத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததையடுத்து படத்தின் டீசரை வெளியிட்டனர் படக்குழுவினர்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து வெற்றியடைந்த KGF திரைப்படம் 2018 ஆம் சக்கை போடு போட்டது. ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாடி தீர்த்த படம் என்றே கே.ஜி.எப் 1 யை குறிப்பிடலாம். இதனையடுத்து அதன் 2ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. கொரோனா காலத்திலும் தீவிரமாக படப்பிடிப்பு பணிகள் நடந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டிசம்பர் 20 ஆம் தேதி KGF இரண்டாம்பாகத்தின் கிளைமேக்சின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் படத்தின் டீசர் ஜன-8ம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இணையத்தில் பட டீசர் கசிந்தது. அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக KGF இரண்டாம்பாகத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.

2.16 நிமிடங்கள் உள்ள இப்படத்தின் டீசர் காட்சிகள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதே என்றே கூறலாம். ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் ஆனாலும் நெட்டிசன்கள் இது டீசரா? ட்ரைலரா? என இணையத்தில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிகிச்சைக்குப் பின் பார்சிலோனா பறந்த விக்னேஷ் – நயன்தாரா ஜோடி

EZHILARASAN D

நம்பர் 1 டிரெண்டிங்கில் தி லெஜண்ட் டிரைலர்

EZHILARASAN D

வேட்டையாடு விளையாடு-2 பாகம் குறித்த புதிய அப்டேட்

Web Editor

Leave a Reply