விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
இந்த ஓவிய போட்டியில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 27 அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 75 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் தேசத் தலைவர்கள் மற்றும் தேசப்பற்றை உணர்த்தும் வகையிலான ஓவியம் வரைந்து அசத்தினர். இந்த ஓவிய போட்டிக்கு அருங்காட்சியக காப்பாளர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ரெ.வீரம்மாதேவி







