75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி

ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள…

ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள நிலையில், தற்போதே பிரபலமான பகுதிகள், அணைக்கட்டுகள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகள் மூவர்ணக் கொடி நிறங்களால் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான கேரள மாநிலம், இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹைடல் சுற்றுலாத் துறை நடத்திய நிகழ்ச்சியின் படத்தை நீர்வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் வெளியிட்டார். இது சமூக வலைதலங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.