முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 73 வயது நடிகை

மலையாளத்தில் பிரபல நடிகையான லீலா ஆண்டனி தனது 73 வது வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் லீலா ஆண்டனி. மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான லீலா ஆண்டனி தனது 13 வது வயதில் இருந்து நூற்றுக்கணக்கான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜோ அண்ட் ஜோ, மகள் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லீலா 10ம் வகுப்பு படிக்கும் போது அவரது தந்தை இறந்ததால் குடும்பத்தை தாங்கும் சுமை இவரின் மீது இறங்கியது. அதன் பிறகு அவரது தாயாரும் இறந்துவிட்டதால் படிப்பை தொடர முடியாத நிலையில் நாடகம், திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது கணவர் ஆண்டனியும் பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அவரும் இறந்துவிட்டார்.

தற்போது லீலா ஆண்டனிக்கு 73 வயது ஆன நிலையில் தன்னம்பிக்கையுடன் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி பாஸ் ஆக வேண்டும் என விரும்பினார். இந்நிலையில் லீலா ஆண்டனி கடந்த 12ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். சேர்க்கை அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வு அறையில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக லீலா ஆண்டனி கூறுகையில், ”திரைப்படங்களில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன், அது பத்தாம் வகுப்பு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருந்தது”என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூக்கிச்செல்ல பாஜக எம்.எல்.ஏ.க்கள் என்ன கத்தரிக்காயா? நயினார் நாகேந்திரன்

EZHILARASAN D

சொந்த ஊர் சென்ற மக்கள்; அதிகரித்த கொரோனா தொற்று

Arivazhagan Chinnasamy

கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்!