“71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய…

"71 drugs not in standard condition"- #CDSCO shock statistic!

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் ஆன்ட்டி பயோடிக், காய்ச்சல், ரத்த உறைவு, சளித் தொற்று, சா்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, கால்சியம் குறைபாடு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 71 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இதே போல மாநில ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 18 மருந்துகள் தரமான நிலையில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. செப்டம்பர் மாதத்துக்கான மருந்துகளின் தரப்பரிசோதனை நிலை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு (CDSCO )அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.