நேபாளம் சிறையிலிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்!

நேபாளத்தில் கலவரம் எதிரொளியாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் பிரதமராக கே.பி.சா்மா ஓலி உள்ளார். பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்த நிலையில்  நேபாளத்தில் கடந்த 4 ஆம் தேதி இன்ஸ்டாகிராம், யூடுயூப் உள்ளிட்ட 26 செயலிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனை தொடர்ந்து இந்த தடை உத்தரவிற்கு எதிராக  அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை கலைக்கு நேக்கில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து நாட்டில் கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.

தொடர்ந்து ஆட்சி மாற்றம் கோரி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நேபாளம் ராணுவம் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறைகளில் இருந்து தப்ப முயன்றதாக 5 இளஞ்சிறார்கள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும்  தப்பியோடிய  கைதிகளை மீண்டும் கைது செய்ய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.