ஜம்மு நகரின் நார்வால் பகுதியில் அடுத்தெடுத்த நிகழ்ந்த குண்டுவெடிப்பால் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் நார்வால் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே இருந்த இரண்டு கார்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதி மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதி. இந்த பகுதியில் வாகனங்களுக்கான டயர் மற்றும் உதிரி பாகங்களுக்கான கடைகள் அதிகமாக உள்ளன. இந்த பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கூடுதல் இயக்குனர் முகேஷ் சிங் தெரிவிக்கையில், “ஜம்முவின் நார்வால் பகுதியில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பால் 7 பேர் காயமடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார். மேலும் குண்டுவெடிப்பு குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் கூறினார்.
காயமடைந்த 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நார்வால் பகுதி தற்போது காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.