சட்டத்தின் நோக்கம் நிறைவேறியது: 7.5% இடஒதுக்கீடு தீர்ப்பில் கருத்து

7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம்…

7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என குறிப்பிட்டனர்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நீட் தேர்வினை எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டத்தை கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, நீட் தேர்வின் அடிப்படையில் தான் இந்த இடஒதுக்கீடு நிரப்பப்படுகிறது, தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது அல்ல எனக் விவரித்துள்ளனர்.

இட ஒதுக்கீடிற்கு முன் 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்தது எனவும், 7.5 ஒதுக்கீட்டிற்கு பிறகு 435 பேருக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது, இதன்மூலம் சட்டத்தின் நோக்கம் நிறைவேறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமூக பொருளாதார பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்பளித்து,தடைகளை தாண்டி வர உதவுவதால் இது அரசியல் சாசனத்திறகு விரோதமானது அல்ல எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.