காசி தமிழ் சங்கமதற்கு 6 வது ரயில் இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான தொன்மையான நாகரிக பிணைப்பை மீட்கும் வகையில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் படி 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து ரயிலில் சென்ற முதல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் 2,592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் ஒரு பகுதியாக ஆறாவது குழு இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமத்திற்கு புறப்பட்டது. இதில் 216 பேர் பயணம் செய்கின்றனர். மாணவர்கள், தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் சிலரும் பாஜக சார்ந்தவர்களும் பயணிக்கின்றனர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்குக் குளிர்பானம், ரொட்டி உள்ளிட்ட பொருட்களை பாஜகவினர் அளித்தனர்.







