முக்கியச் செய்திகள் வணிகம்

600 ஊழியர்களை நீக்கிய தனியார் நிறுவனம்

சாஃப்ட்பேங்க் மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆதரவு பெற்ற கார்ஸ்24 நிறுவனம் நிதிப் பிரச்னை காரணமாக 600 ஊழியர்களை பணியைவிட்டு நீக்கியது.

2015ஆம் ஆண்டு கார்ஸ்24 நிறுவனம் தொடங்கப்பட்டது. பழைய கார்கள் வாங்குவதையும் விற்பனை செய்வதையும் எளிமைப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். ஒரே ஒரு அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நாடு முழுவதும் 182 முக்கிய நகரங்களில் 205 கிளைகளை நிறுவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

4 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கும் சேவையை வழங்கியது.
சமீப காலமாக, முதலீட்டார்களின் முதலீடு குறைந்து வருவதால் நிதியை தக்க வைக்க பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவந்த 600 ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது கார்ஸ்24 நிறுவனம். யூஎன்அகாடெமி, வேதாந்து, மீஷோ ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை இதே காரணத்துக்காக பணியை விட்டு நிறுத்தினர். அந்த வரிசையில் கார்ஸ்24 நிறுவனமும் இணைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?

EZHILARASAN D

ஆர்.என்.ரவி ஆளுநர் பணியை தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Web Editor

சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?

EZHILARASAN D