கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி ராஜாக்கமங்கலம் பகுதிகளில்
உள்ள மாங்குரோவ் காடுகளில், இன்னும் ஒரு மாதத்தில் 60 ஆயிரம்
மரச்செடிகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி ராஜாக்கமங்கலம் பகுதியில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது மாங்குரோவ் காடுகள் அரணாக கொண்ட கிராமங்களில் , கடல் அலைகள் தடுக்கப்பட்டு பாதிப்பு குறைந்தது .
மேலும், மணக்குடி பகுதியில் தற்போது சீம கருவேல மரங்கள அகற்றப்பட்டது.
ஊரக வளர்ச்சித் துறையின் உதவியுடன் 2000 மரங்கள் நடப்பட்டு வருகின்றன. ராஜகமங்கலம் பகுதியில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 45 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் சுமார் 60 ஆயிரம் மரச்செடிகள் நடப்பட்டு, வருங்காலத்தில் அவை ராஜாக்கமங்கலம் மற்றும் மணக்குடி மற்றும் கடலோர பகுதி மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
மேலும், மீன்கள் இனப்பெருக்கத் திற்கும், பொது மக்களுக்கும் மற்றும் பறவைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றனர். அதன் பின்னர் , சீசன் களில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
—-கு.பாலமுருகன்







