நைஜீரியா படகு விபத்தில் 60 பேர் பலி – 10 பேர் மீட்பு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வட மத்திய நைஜர் மாகாணத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட படகு போர்கு பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது  நீரில் மூழ்கியிருந்த மரத்தின் அடிப்பகுதியில் மோதியது. இதனால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. காலை இந்த சம்பவம் காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள்தாகவும் மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜர் மாநில அவசர மேலாண்மை நிறுவனமானது, பாதிக்கப்பட்டவர்களை அவசரகால பணியாளர்களும் உள்ளூர் டைவர்ஸும் தேடி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அதிக சுமையுடன் இருந்த படகு  மரத்தின் அடிப்பகுதியில் மோதியதால் விபத்திற்குள்ளானது என்று தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் , அதிக கூட்ட நெரிசல் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் படகுகள் காரணமாக இம்மாதியான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.