கொலைக் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றம் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை மாற்றப்பட்டார். கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட…

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றம் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை மாற்றப்பட்டார்.

கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கடந்த 8ஆம் தேதி மதுரை மாவட்டம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை யுவராஜ் மட்டும் மதுரை மத்திய சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். யுவராஜ் தவிர்த்து அருண், சிவக்குமார், சதீஸ்குமார், ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, கிரிதர் ஆகிய 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.