ஒசூா் அருகே ஏரியில் ஆனந்தமாக குளித்த யானைகள்!

ஓசூர் அருகே ஏரியில் 6 யானைகள் முகாமிட்டு ஆனந்த குளியலிட்டன. யானைகளை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட…

ஓசூர் அருகே ஏரியில் 6 யானைகள் முகாமிட்டு ஆனந்த குளியலிட்டன. யானைகளை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு ராகி, கரும்பு, தக்காளி, பீன்ஸ், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற விவசாயப் பயிர்களை உண்டும், ஏரியில் குளித்தும் வருகின்றன. இந்த யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து நொகனூர் வனப் பகுதியிலிருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த 6 யானைகள், ஒசூர் அருகே உள்ள மதகொண்டப்பள்ளி கௌரம்மா ஏரியில் நேற்று ஆனந்தக் குளியலிட்டன.யானைகளை பாதுகாப்பாக விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். யானைகள் கூட்டத்தைக் காண கிராம மக்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. விரைந்து வந்த ஜவளகிரி வனத்துறையினர், தளி போலீஸார் பொதுமக்களை கட்டுப்படுத்தினர். காலை முதல் மாலை வரை யானைகளை பாதுகாத்து, ஆள்நடமாட்டம் குறைந்த பிறகு மாலையில் அவைகளை அங்கிருந்து விரட்டினர். இதையடுத்து, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் அந்த 6 யானைகளும் சென்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.