தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது.
ரூ.1000 ஆக உள்ள உதவித் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அமைப்பினர் முன்வைத்துள்ளனர். இதுபோன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என பேசி வருகின்றனர். இருப்பினும் அவர்களது அமைதி வழி போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.







