ராஜஸ்தான் மாநிலத்தின் 50 நகராட்சிகளில் 1,775 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
மொத்தமுள்ள 1775 வார்டுகளில் காங்கிரஸ் 619 வார்டுகளையும், பாஜக 549 வார்டுகளையும்,, சுயேட்சைகள் 595 வார்டுகளையும் வசப்படுத்தியுள்ளன.
பகுஜன் சமாஜ் 7, சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 2, RLP கட்சி தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் கூறுகையில், 41 நகராட்சிகளில் காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்ற உள்ளது. பாஜக 9 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 17 நகராட்சிகளை சுய பலத்திலும், எஞ்சிய 24 நகராட்சிகளை சுயேட்சைகளின் ஆதரவுடன் கைப்பற்றுகிறது என்றும் கோவிந்த் தெரிவித்தார்.







