இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் :  கே.எல் ராகுல் விலகல்… மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியிலிந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும், தற்காலிக ஓய்விலிருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட…

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியிலிந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும், தற்காலிக ஓய்விலிருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கே.எல்.ராகுல் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.  அவர் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார் எனக் கூறப்பட்ட நிலையில்,  இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.  பிசிசிஐ-ன் மருத்துவக் குழு அவரது உடல் நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  வேலைப்பளு மேலாண்மை காரணமாக விடுப்பிலிருந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.