தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். அப்போது பேசியவர், தமிழகத்தில் 10ல் இருந்து 17 இடங்களில் தான் விளையாட்டு வீரர்கள் தங்கும் இடம் உள்ளது.
இந்த வருடத்திற்குள் 38 விளையாட்டு மாவட்டத்தில் விளையாட்டு விடுதி தொடங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு தனிப்பட்ட வசதி செய்து தரப்படும். சென்னையில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். பெண்களுக்கான சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும். ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். டென்னிஸ் விளையாட்டுக்கு ஒடிசா மாநிலம் 200 கோடி ரூபாய் முதலீடு செய்தது. ஒலிம்பிக் மெடல் பெறுவதற்கான நாம் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.
திறமையான மாணவர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் பயிற்சி. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிப்பு. சென்னையில் பேரா ஒலிம்பிக் விளையாட்டு மையம் அமைக்கப்படும். 500 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படும். விளையாட்டு சங்கங்கள் பிரச்சனை இருந்தால் SDAT சங்கத்தை ஏற்று நடத்தும். பெண்களுக்கான தனி விளையாட்டு போட்டி நடைபெறும் என்றார்.




