அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு – அமைச்சர் சரத்குமார்!

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்து பேசுகையில், “அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிகழக ஆட்சி தான். நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான். உள்ளத்திலும் வெள்ளை குணம் கொண்டவர் தான் முதலமைச்சர். சிறப்பான முறையில் மனித வளம் மேம்பாட்டுதுறை செயல்பட்டு வருகிறது. அரசின் எல்லா துறைகளும் மாற்றத்தின் தோற்றமாக செயல்படுகிறது. மருத்துவத்துறை மகிழ்ச்சி துறையாக மாறி உள்ளது.

தொழில்துறை ஊசி முதல் ஏசி வரை சுலபமாக செய்யும் தொழிலாக மாறி உள்ளது. பதிவுத்துறை பட்டா வீடு தேடி வருகிறது. காவல்துறை, விளையாட்டு கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களில் பல்வேறு சேவைகளை மக்கள் பாராட்டி வருகின்ற, இது தான் மக்களாட்சி. அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும். அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.