மார்ச் மாதத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்- வருமான வரித்துறை

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே,…

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே, தாமதிக்காமல் உடனே இணையங்க வேண்டும். மேலும், வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் விலக்கு அளிக்கப்பட பிரிவினரை தவிர அனைத்து பான் அட்டைதாரர்களும் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம். அவ்வாறு இணைக்கப்படாத பான் அட்டைகள், ஏப்ரல் 1ம் தேதி முதல் செயலற்றதாகிவிடும்.

மத்திய நிதியமைச்சகம், கடந்த 2017ல் வெளியிட்ட அறிக்கையின்படி, அஸ்ஸாம், மேகாலயம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவர்கள், 1961ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள், கடந்த ஆண்டில் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள் உள்ளிட்டோர் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினர் ஆவர்.

பான் அட்டை செயல்படாவிட்டால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள கணக்குகள் மீதான நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. நிலுவையில், இருக்கும் நடைமுறையைப் பூர்த்தி முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.