மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்கச்சப்பரம்

மதுரை சித்திரை திருவிழாவின் 5-வது நாளான இன்று, தங்க சப்பரத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும்…

மதுரை சித்திரை திருவிழாவின் 5-வது நாளான இன்று, தங்க சப்பரத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 5ம் நாளான இன்று, அலங்கரிக்கப்பட்ட தங்க சப்பரத்தில் நீல வண்ண பட்டாடை உடுத்தி மீனாட்சியும், சுந்தரேசுவரரும் எழுந்தருளினர்.

இதையடுத்து வீதி உலா நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரருடன், பரிவார தேவதைகளும் ஊர்வலமாக வந்தனர். வீதி உலா நடைபெற்ற மாசி வீதிகளில் மீனாட்சி சுந்தரேசுவரரை பக்தர்கள் பக்தியுடன் வரவேற்றனர். இதையடுத்து, மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும், பிரியாவிடை அம்மனும் ராமாயண சாவடி மண்டகப்படியில் எழுந்தருளினர்.

இரவு 7 மணி வரை ராமாயண சாவடி மண்டபத்தில் எழுந்தருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மன் ஆகியோர், அதன் பின்னர் மீண்டும் மாசி வீதிகள் வழியாக தங்க குதிரை வாகனத்தில் கோயிலுக்கு திரும்புகின்றனர். இதையடுத்து, இன்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் கோயிலில் உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர்பறி லீலை நிகழ்வு நடைபெறுகிறது. சித்திரை திருவிழா காரணமாக மதுரை விழாக் கோலம் பூண்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.