சென்னை பட்ஜெட்: சொத்து வரிக்கான புதிய ஏற்பாடு

QR குறியீட்டின் மூலம் சொத்து வரி செலுத்த வழிவகை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின்போது…

QR குறியீட்டின் மூலம் சொத்து வரி செலுத்த வழிவகை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட மேயர் பிரியா ராஜன், ரிப்பன் பில்டிங் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தானியங்கி கருவி மூலமும், QR குறியீட்டின் மூலமும் சொத்து வரி செலுத்த வழிவகை செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

வர்த்தகர்கள் டிஜி லாகக்ர் அமைப்பில் இருந்து வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நம்ம சென்னை செயலி மூலம், கூடுதலாக தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தும் என்றும் மேயர் பிரியா ராஜன் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.