சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் உயர்தர நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்குள்ள 4 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் பனிசறுக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பனிசறுக்கு போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அப்பகுதியில் சூரைக்காற்று வீசியுள்ளது. இதையடுத்து அங்கு பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பனிச்சறுக்கு விளையாடியவர்கள் 5 பேர் பனிக்குவியலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வந்த ராணுவ வீரர்கள் பனிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.








