இன்னும் 5 ஆண்டுகள் நான் விளையாடியிருந்தால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பந்துவீச்சாளர் சோயிக் அக்தர் ஆவார். இவர் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு முறை 161.3 கிலோமீட்டர் (100.2 mph) வேகத்தில் பந்து வீசி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர் உயிர் துடிப்பற்ற ஆடுகளத்தில் கூட யார்கர் வகைப்பந்துகள் மற்றும் கூர்மையான துள்ளி எழும் வகைப்பந்துகளை வீசும் திறமை படைத்தவர்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ், சோயப் அக்தர் நீண்ட
காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் தற்போது
ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை பெற்று வந்தார்.
மெல்போர்னில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள ‘நான் வலியில் இருக்கிறேன், எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
https://twitter.com/shoaib100mph/status/1556052211456696326
இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்கு ஆடியிருக்க முடியும். ஆனால் அப்படி ஆடியிருந்தால் அப்போதே நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் பூராவும் அமர வேண்டிய
துர்பாக்கியசாலியாகியிருப்பேன்.
அதனால் தான் நான் உடனடியாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் அதுவுமே பாகிஸ்தானுக்காகச் செய்வது மதிப்பு மிக்கது தான். வேகமாக பந்து வீசுவதன் பலன் எலும்புகளை இழந்து விடுவோம். ஆனால் அது பரவாயில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது” என்றார்.







