இபிஎஸ் அணிக்கு மாறிய எஸ்.பி.வேலுமணி தரப்பு 5 எம்.எல்.ஏக்கள்…!

எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த தோல்வியால் அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்.பி. வேலுமணி & சி.வி. சண்முகம் தரப்பு என இரு அணிகளாக கட்சி பிரிந்தது.

இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்களான திலீபன் ஜெய்சங்கர், சுகுமார், ஹரிபாஸ்கர், மோகன், நடராஜன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனால் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.