ஆனந்த அம்பானியின் 5 ஆடம்பரமான உடமைகள்!

ஆனந்த அம்பானியின் அரிய கைக்கடிகாரம் மற்றும் சொகுசு கார் உள்ளிட்ட சில ஆடம்பரமான உடமைகளை பற்றி இங்கு காணலாம். உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா…

ஆனந்த அம்பானியின் அரிய கைக்கடிகாரம் மற்றும் சொகுசு கார் உள்ளிட்ட சில ஆடம்பரமான உடமைகளை பற்றி இங்கு காணலாம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்சண்டுக்கும் இன்று (ஜூலை 12) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது.   முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன. இந்த வார தொடக்கத்தில் சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தது.

உலக பிரபலமான ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் போன்றவர்களை அழைத்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இசை கச்சேரிகள் நடத்தப்பட்டன. அனந்த் அம்பானியின் அரிய கைக்கடிகாரம் மற்றும் சொகுசு கார் உள்ளிட்ட 5 ஆடம்பரமான உடைமைகளை பற்றி பார்க்கலாம்.

1. பாம் ஜுமேராவில் உள்ள வில்லா

2022 ஆம் ஆண்டில், அனந்த் அம்பானி தனது தந்தை முகேஷ் அம்பானியிடம் இருந்து துபாயில் உள்ள பாம் ஜுமேராவில் வில்லாவைப் பெற்றார். இதற்கு சுமார் ரூ.640 கோடி செலவாகியதாக கூறப்படுகிறது.  இந்த வில்லாவில் 10 படுக்கையறைகள், ஒரு சலூன், ஒரு பெரிய சாப்பாட்டு அறை, ஒரு மசாஜ் சென்டர் மற்றும் 70 மீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது.

2. ரிச்சர்ட் மிலே கடிகாரம்

ஆனந்த் அம்பானி எப்போதுமே தன்னுடைய தனித்துவமான கைக்கடிகாரங்களுக்கு பெயர் போனவர்.  ஒரு நிகழ்வின் போது அவர் அணிந்திருந்த அத்தகைய கைக்கடிகாரம்  ஒன்று வைரலானது. அது ரிச்சர்ட் மிலே ஆர்எம் 12-01 டூர்பில்லியன் (Richard Mille RM 12-01 Tourbillon) என்ற ஒரு பிரத்தியேக கை கடிகாரமாகும். சர்வதேச அளவில் இந்த வகையில் மொத்தம் 30 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.

அதில் ஒன்று ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார். இந்த ஆர்.எம். 12-01 வகை கை கடிகாரங்கள் என்பது நான்கு வித்தியாசமான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த கைக்கடிகாரத்தின் சிறப்பே இது கார்பனால் தயாரிக்கப்பட்டது என்பது தான்.  இதன் விலை ரூ.12.5 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3. ரோல்-ராய்ஸ் பாண்டம்

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அம்பானி குடும்பம் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளது.  அவை உலகின் மிக ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும். ஆனந்த் அம்பானி  சமீபத்தில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாண்தம் காரை வாங்கியுள்ளார்.   இது ஆனந்த் அம்பானிக்கு சொந்தமான மிகவும் விலையுயர்ந்த கார் என்று கூறப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.9.5 கோடி.

4. பென்ட்லி கான்டினென்டல் ஜிடி 

ஆனந்த் அம்பானி பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் கார் வைத்துள்ளார்.  பிரிட்டிஷ் வடிவமைத்த சிறந்த கார்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.  இந்த கார் ரூ.4.5 கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.

5. கிராண்ட்மாஸ்டர் சைம்

ஆடம்பர பிராண்டான படேக் பிலிப் (Patek Philippe) நிறுவனம் தயாரித்த கிராண்ட்மாஸ்டர் சைம் (Grandmaster Chime) என்ற கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி கட்டியிருந்தார். அவர் கட்டியிருந்த அந்த வாட்ச்சின் விலை 18 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடையது என கணிக்கப்படுகிறது.  இந்த வாட்ச் பிரத்தியேகமான முறையில் 6  வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.