மதுரை இரயில் நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுரை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் மோப்பநாய் ஆஸ்டின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பயணிகளின் உடைமைகள், ரயில் நிலையங்கள் முழுவதும் அனைத்து பகுதிகள் மற்றும் ரயில் பெட்டிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதை முன்னெச்சரிக்கை உறுதிப்படுத்தி வருகின்றனர்.